சென்னை::அஜித் என்றாலே அடக்கம், கருணை என்று சொல்லிவிடலாம்! இது பள்ளிகள் திறக்கும் சீசன் என்பதால், சில மாஸ் ஹீரோக்கள் தங்கள்படங்களை நோட்டுப்புத்தங்களில் அச்சடித்து அதை ஏழை மாணவர்களுக்கு வழங்கி விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள்.
ஆனால் அதில் இதற்கு நேர்மாறான மனிதர்! அஜித்தின் அலுவலகம் அமைந்திருக்கும்ஆர்.ஏ.புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எத்தனை வகுப்புகள் இருக்கின்றன, எத்தனை மாணவர்கள் என்பதை தனதுமேலாளாலர் மூலம் கணக்கு எடுத்து வரச் செய்து,
அத்தனை மாணவர்களுக்கும், ஏழை மாணவர்கள் வாங்கமுடியாத முதல்தரமான காகிதத்தில் தயாரான ‘கிளாஸ் மேட்’ என்ற நோட்டுப்புத்தகங்கள் வாங்க 17 லட்சம் ரூபாய்க்கு ஆர்டர் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக கொடுத்திருக்கிறாராம். இந்த விஷயம் பள்ளியின்தலைமை ஆசிரியர் வழியே வெளியே கசிந்திருக்கிறது..!
தல- கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் வாழும் ஒரு நல்ல மனிதர்...
Comments
Post a Comment