8th of September 2013
சென்னை::நடிகர் கார்த்தி எம்.ராஜேஷ் இயக்கத்தில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பிரியாணி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படம் முடியும் தருவாயில் உள்ள நிலையில் வரும் தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர். ‘பிரியாணி’ படத்தை பொங்கலுக்கு பரிமாற உள்ளனர்.
இந்நிலையில், இப்படங்களுக்கு பிறகு கார்த்தி, ‘அட்டக்கத்தி’ பட இயக்குனர் ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ‘கும்கி’, ‘சுந்தரபாண்டியன்’ ஆகிய படங்களில் நடித்த லட்சுமி மேனன் நடிக்கிறார்.
இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக டி.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். மேலும் பிற நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. படம் குறித்து மேலும் விவரமான தகவல்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

Comments
Post a Comment