12th of September 2013
சென்னை::பணத்தை இறைத்தாவது படங்களின் ரைட்ஸை வாங்குவது என்ற முடிவில் களமிறங்கியிருக்கிறது சன் தொலைக்காட்சி.
பெரிய படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்குவதில் சுணக்கமாக இருந்த சன் சமீபமாக சுறுசுறுப்படைந்திருக்கிறது.
தலைவா மற்றும் ஜில்லா படங்களின் ஒளிபரப்பு உரிமையை 30 கோடிக்கு - ஒவ்வொன்றும் 15 கோடிகள் - வாங்கியது. தற்போது ஸ்டுடியோ கிரினின் பிரியாணி, அழகுராஜா படங்களின் தொலைக்காட்சி உரிமையையும் வாங்கியுள்ளது.
ஒரு படத்துக்கு 11.5 கோடிகள் என்று 23 கோடிக்கு இரண்டு படங்களின் உரிமையை வாங்கியுள்ளது.
பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டும் முன்னுரிமை தராமல் சின்ன பட்ஜெட் படங்களையும் சேட்டிலைட் சேனல்கள் கண்டு கொண்டால் திரையுலகம் செழிக்கும்.
Comments
Post a Comment