7th of September 2013
சென்னை::ராகினி திவேதிக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய அசோசியேட் இயக்குனருக்கு பிலிம்சேம்பர் தடை விதித்தது.கன்னட நடிகை ராகினி திவேதிக்கு கன்னட பட அசோசியேட் இயக்குனர் உமேஷ் என்பவர் சமீபத்தில் ஒரு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினார். அதில் ராகினியை ஆபாசமாக வர்ணித்து கமென்ட் அடித்திருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராகினி இதுபற்றி தனது தந்தையிடம் கூறினார்.
இதையடுத்து அசோசியேட் இயக்குனர் மீது போலீசில் புகார் தரப்பட்டது.இதுபற்றி கர்நாடக பிலிம்சேம்பர் ஆப் காமர்ஸி லும் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து உமேஷுக்கு அடுத்த 3 மாதத்துக்கு எந்த படத்திலும் பணி புரியக்கூடாது என தடை விதிக்கப்பட்டது.
இதுபற்றி கூறிய ராகினி, ‘என்னுடைய செல்போனுக்கு உதவி இயக்குனர் ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியது ஷாக் ஆக இருந்தது. இந்த போனை எனது அம்மாதான் பயன்படுத்துவார். தொடர்ந்து இதுபோல் பலமுறை எஸ்எம்எஸ் வந்ததையடுத்து அதை முடிவுக்கு கொண்டுவரவே இந்த புகார் கொடுக்கப்பட்டதுÕ என்றார்.
Comments
Post a Comment