28th of September 2013
சென்னை::சூர்யா, விஜய் என முன்னணி நட்சத்திரங்களுடன் ஒரே நேரத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார் சமந்தா.
மாஸ்கோவின் காவிரியில் அறிமுகமான சமந்தாவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு சென்றது கௌதம் வாசுதேவ மேனனின் விண்ணைத் தாண்டி வருவாயா.
தமிழ் பதிப்பில் சின்ன வேடத்தில் நடித்தவர், தெலுங்குப் பதிப்பில் நாயகியாக நடித்தார். அதாவது த்ரிஷாவின் வேடம்.
அப்போது உயரத் தொடங்கிய அவரின் மார்க்கெட் இன்றும் வெங்காய விலை போல வீழ்ச்சியடையவில்லை.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பெயரிடப்படாதப் படத்தில் சமந்தா சூர்யா ஜோடியாக நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
அதேபோல் இந்த வருட இறுதியில் தொடங்கும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் சமந்தாதான் நாயகியாம்.
படத்தின் பெயர் மற்றும் பிற விவரங்கள் முடிவு செய்யப்படாத நிலையில் சமந்தா நாயகி என்பதை மட்டும் உறுதி செய்துள்ளனர்.
அனேகமாக இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கலாம் என கூறப்படுகிறது.
Comments
Post a Comment