சென்னை::தயாரிப்பாளராக இருந்து நடிகராகவும் மாறிய உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘இது கதிர்வேலன் காதல்‘. ‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகர் இயக்கி வரும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் இன்று தொடங்கியது.
இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ‘மயக்கம் என்ன’, ‘3’ ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக புகழ் போட்டோகிராபரான சுந்தர் ராமு இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கின்றார்.
நயன்தாரா இப்படத்தில் பவித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடுத்தர குடும்பத்து சாதாரண பெண்ணாக நடிக்கிறார். வேலையில்லாத இளைஞராக வரும் உதயநிதி மதுரைக்குச் செல்லும்போது இவரை பார்த்து காதலில் விழுகிறார். இதுதான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்திலும் நடிகர் உதயநிதியுடன், சந்தானம் சேர்ந்து காமெடியில் கலக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக பாலசுப்ரமணியம் பணியாற்றுகிறார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கிறது.

Comments
Post a Comment