கும்பலில் தாவணியை கழற்றச் சொல்லி தகராறு : ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ பட டைரக்டர் மீது ஹீரோயின் பரபரப்பு புகார்!!!

24th of September 2013
சென்னை::நடிக்கப்போன இடத்தில் திடீரென்று டைரக்டர் தாவணியை கழற்றச் சொன்னதால் எரிச்சலான ஹீரோயின் அவருடன் தகராறு செய்த சம்பவம் ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படப்பிடிப்பில் நடந்துள்ளது.
 
ஹெச்3 சினிமாஸ் தயாரிப்பில் வேகமாக வளர்ந்து வரும் படம் தான் “சாய்ந்தாடு சாய்ந்தாடு”. இந்தப் படத்தை தயாரித்து இயக்குகிறார் கஸாலி. இந்தப் படத்தின் ஹீரோயினாக கேரளாவைச் சேர்ந்த அனுகிருஷ்ணா நடித்து வருகிறார்.
 
படப்பிடிப்பில் திடீரென டைரக்டர் தன்னிடம் தாவணியை கழட்டும்படி அந்தப்படத்தின் டைரக்டர் வம்பிழுத்ததாக பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார் அனு.
 
எதற்காக அப்படின் சொன்னார் டைரக்டர் என்று கேட்டதற்கு இதோ அவரே சொன்ன பதில் :
 
நான் ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ படத்
தில் ஹீரோயினாக நடிக்கிறேன். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்றது. கதைப்படி ஒருகாதல் காட்சியில் ஹீரோவிடம் ஹீரோயின் மீன் பிடித்து தரச் சொல்லும் காட்சி அது. காலையிலிருந்தே அனைவரையும் ஒரு குளத்தில் இறக்கி விட்டிருந்தார் டைரக்டர். அந்தக் காட்சியில் ஹீரோ ஆதர்ஸ் என் தாவணியைப் பிடித்து இழுத்து அவிழ்த்து மீன் பிடிக்க வேண்டும் என்று இயக்குநர் சொன்னார்.
 
குளத்தைச் சுற்றி சூட்டிங் பார்க்க வந்தவர்கள் நிறைய பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் முன்னால் நான் ஜாக்கெட்டோடு நிற்க முடியாது என்றேன்.
 
ஆனால், அந்தக் காட்சி அழகாக வரவேண்டும் என்றால் அப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று டைரக்டர் என்னிடம் சொன்னார். நான் முடியாது என்று மறுத்தேன். ஆனால் டைரக்டரும், கேமராமேனும் மீண்டும் மீண்டும் என்னிடம் வற்புறுத்தினர். கடைசிவரை நானும் பிடிவாதமாக இருந்ததால், அதே காட்சியை அதே அழகு குறையாமல் விரசமில்லாமல் எடுத்தனர். என் மனதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப சிறுமாற்றம் செய்த டைரக்டருக்கு நான் நன்றி சொன்னேன்.
 
க்கும்… உங்க நன்றி யாருக்கு வேணும் மேடம்.

Comments