ரஜினியுடன் ஜோடி சேர ஆசை: சன்னி லியோன்!!!

27th of September 2013
சென்னை::ரஜினியுடன் ஜோடி போட ஆசைப்படுகிறாராம் கவர்ச்சி நாயகி சன்னிலியோன்.
 
கனடாவை சேர்ந்தவர் சன்னி லியோன். இந்திய வம்சா வழியான சன்னி லியோன் பாலியல் படங்களில் நடித்த இவர் இப்போது இந்திப் படங்களில் கவனம் செலுத்துகிறார். அவர், இந்தியில் ஜாக்பாட் என்ற படத்தில் நடிகர் பரத்துடன் நடித்து வருகிறார். கவர்ச்சி படங்களில் மட்டுமே அதிகமாக நடித்து வந்த இவர் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலை பார்த்து மிரண்டு போனாராம்.
இது குறித்து சன்னி லியோன் கூறியதாவது:
 
இந்தியில் இப்போது ‘ஜாக்பாட்’ என்ற படத்தில் நடித்துவருகிறேன். இதில் தமிழ் நடிகர் பரத் என்னுடன் நடிக்கிறார். அவருடைய அணுகுமுறை எனக்குப் பிடித்திருக்கிறது. அடிக்கடி காமெடி செய்துகொண்டே இருப்பார். இந்தப் படத்துக்குப் பிறகு இன்னும் சில படங்களில் நடிக்க இருக்கிறேன். தற்போதுதான் தென்னிந்திய படங்களின் பாடல்களை பார்க்கிறேன். சில பாடல்கள் மற்றும் நடனம் பிடித்திருக்கிறது.
 
சூப்பர் ஸ்டார் ரஜினியை எனக்குத் தெரியும். சிகரெட்டை லாவகமாக தூக்கிப் போட்டுப் பிடிக்கும் அவர் ஸ்டைல் பற்றி அதிகம் கேள்விபட்டிருக்கிறேன். அதை நேரில் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். அவருடன் நடிக்கவும் ஆசை இருக்கிறது என்றார்.

Comments