26th of September 2013
சென்னை::தற்போது சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் பெரும்பாலான நடிகைகளுக்கு ஜோதிகா, சிம்ரன் போன்ற நடிகைகள்தான் ரோல் மாடலாக இருககிறார்கள். இதில் கும்கி நாயகி லட்சுமிமேனனின் ரோல் மாடல் ஜோதிகாதானாம். காக்க காக்க, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் ஜோதிகாவின் நடிப்பு அவருக்கு ரொம்ப பிடிக்குமாம். ஒரு தடவை அல்ல பல தடவை அந்த படங்களை திரும்பத்திரும்ப பார்த்திருக்கிறாராம்.
அதனால் ஜோதிகா போன்று ஒரு நடிகையாக சினிமாவில் வலம்வர வேண்டும் என்ற ஆசையுடன்தான் இப்போது கதைகளை செலக்ட் பண்ணி நடிக்கிறாராம். தற்போது விஷாலுடன் நடித்துள்ள பாண்டியநாடு படத்தில் லட்சுமிமேனனுக்கு டீச்சர் வேடமாம்.
இதுபற்றி அவர் கூறுகையில்,
தற்போது பிளஸ் ஒன் படித்து வரும் நான், இந்த படத்தில் டீச்சராகவே நடிக்கிறேன். எனது உடல்கட்டு அதற்கு பொருந்தியதால் இந்த வேடத்தில் நடிக்கிறேன். இந்த வேடத்துக்காக எனக்கு பள்ளியில் பாடம் சொல்லித்தந்த சில ஆசிரியர்களை நான் சில இடங்களில் ரோல்மாடலாக எடுத்துக்கொண்டாலும், ஜோதிகா பாணியில்தான் அவற்றை பிரதிபலித்தேன். அதனால் பாண்டியநாடு படத்தில் என் நடிப்பைப்பார்த்துவிட்டு காக்க காக்க ஜோதிகா போன்று இருப்பதாக சொல்கிறார்கள். அதைக்கேட்டு ரொம்ப சந்தோசமாக உள்ளது என்கிறார் லட்சுமிமேனன்.

Comments
Post a Comment