விஜய் ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி விருந்தாக 'ஜில்லா' போஸ்டர் வெளியிட முடிவு!!!

4th of September 2013
சென்னை::தலைவா படத்திற்குப் பிறகு சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. சௌத்ரி தயாரித்து வரும் படம் ‘ஜில்லா’. இப்படத்தில் விஜய், காஜல் அகர்வால், மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் நேசன் இயக்குகிறார்.

'தலைவா' பட பிரச்சினைகளால் கவலையில் இருந்த விஜய் தற்போது, ஜில்லா படப்பிடிப்பில் உற்சாகமாக காணப்படுகிறார். அதற்கு காரணம், இப்படத்தில் விஜய் இதுவரையிலான படங்களில் பார்த்திராத அளவுக்கு மிகவும் அழகான தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க மதுரையில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்போதே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி விருந்தாக ஜில்லாவின் போஸ்டரை (First Look) வெளியிட திட்டமிட்டுள்ளனர்
tamil matrimony_INNER_468x60.gif

Comments