சிட்டி ஸ்டோரிஸ் எடுபடாததால் கிராமத்து கதைக்கு திரும்புகிறார் கார்த்தி!!!

10th of September 2013
சென்னை::நகரத்து வாலிபனாக நடித்து வரும் கார்த்தி, நண்பர்கள் அட்வைஸ்படி மீண்டும் கிராமத்து வேடம் ஏற்க முடிவு செய்திருக்கிறார்.அமீர் இயக்கிய ‘பருத்திவீரன் படத்தில் கசங்கிய சட்டை, அழுக்கு லுங்கி கட்டி கிராமத்து முரட்டு வாலிபனாக கார்த்தி நடித்தது பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. ஆனால் அடுத்தடுத்த படங்களில் டிப் டாப் காஸ்டியூம்களில் நகரத்து வாலிபனாக வலம் வந்தார். கிராமத்து வேடத்தில் கிடைத்த வரவேற்புபோல் இந்த கதாபாத்திரங்களுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.
 
தற்போது கார்த்தி நடிப்பில் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா, ‘பிரியாணி ஆகிய 2 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.இந்நிலையில் மீண்டும் கிராமத்து வேடங்களை ஏற்கும்படி அவரது விசுவாசிகள் அட்வைஸ் சொன்னார்களாம். இதற்காக நேரம் பார்த்துகொண்டிருந்தவருக்கு ‘அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித் சொன்ன கதை கிராமத்து பின்னணியில் அமைந்ததால் கவர்ந்தது. உடனே ஒப்புக்கொண்டார். இதுபற்றி இயக்குனர் கூறும்போது, ‘பருத்தி வீரன்போல் இப்படமும் வறட்சியான கிராமத்து பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. கார்த்திக்கு இது வித்தியாசமான படமாக அமையும் என்றார்.

Comments