சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்கும் மிஸ் இந்தியா!!!

10th of September 2013
சென்னை::2012 ல் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டவர் வான்யா மிஸ்ரா. பஞ்சாபின் ஜலந்தரைச் சோந்தவர். 21 வயதாகும் வான்யா மிஸ்ரா தமிழ்ப் படத்தில் நடிக்கிறார்.
 
பி.இ. எலெக்ட்ரிகல் படிக்கும் வான்யா மிஸ்ரா தனது கவனத்தை மாடல், விளம்பரம், சினிமா என்று படிப்புக்கு சம்பந்தமில்லாத திசைகளில் திருப்பியிருக்கிறார். சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்று ஆசைப்படும் அழகான பெண்களுக்கென்றே சிவப்பு கம்பளம் தயாரித்து வைத்திருக்கும் உலகம், தமிழ் சினிமா. வான்யா மிஸ்ராவும் தமிழில் அறிமுகமாகிறார்.
 
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாதான் அவரை அறிமுகப்படுத்துகிறார். தமிழ், தெலுங்கில் இப்படம் தயாராகிறது. இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. தெலுங்கு நடிகர் பிரின்ஸ் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

Comments