5th of September 2013
சென்னை::ஸ்டைலை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். எதிலும் சீக்கிரம் திருப்தி அடைய கூடாது என்றார் சமீரா ரெட்டி. இது பற்றி அவர் கூறியதாவது:
வாரணம் ஆயிரம் தொடங்கி நான் நடித்த எல்லா கேரக்டர்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதாகவே இருக்கும். அதிலும் எனது காஸ்டியும், மேக்அப் ஒரே பாணியில் இல்லாமல் மாறுபட்ட தோற்றங் களை ஏற்றேன். நிஜ வாழ்க்கை யிலும், சினிமா வாழ்க்கையிலும் இந்த மாற்றம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஒரே பாணியில் உடை அணிந்து ஸ்டைலை பராமரித்துக்கொண்டிருந்த பாணியை கைகழுவிவிட்டேன். இப்போது சோதனை முயற்சிகளைத்தான் நிறைய மேற்கொள்கிறேன். சீக்கிரம் எதிலும் திருப்தி அடையக்கூடாது.
என்னை பொறுத்தவரை எதையும் பாதுகாப்பு கருதி குறைத்துக்கொள்ளவும் மாட்டேன். நீண்ட கூந்தல், பெரிய கண்கள், சிவப்பு லிப்ஸ்டிக், இறுக்கமான உடை இதெல்லாம் பெண்கள் கையாளும் பாதுகாப்பான ஸ்டைல். ஆனால் இப்படி ஒரே பாணி யில் இருந்துவிடக் கூடாது. உடலழகில் தொடங்கி கூந்தல் வரை சோதனை முயற்சியை தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். எல்லா பாணியும் எல்லோருக்கும் பொருந்திவிடாது. நமக்கு எது பொருத்தமாக இருக்குமோ அதை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.
Comments
Post a Comment