10th of September 2013
சென்னை::கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கவில்லை என தகவல் பரவியுள்ளது. லிங்குசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் உத்தம வில்லன். இதை நடிகரும் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்க ஒப்பந்தமானார். இப்படத்துக்கு திரைக்கதை, வசனங்களை கிரேஸி மோகன் எழுதி வந்தார். இந்நிலையில் இப்படம் கைவிடப்பட்டுவிட்டதாகவும் இதற்கு பதிலாக மூ என்ற படத்தை லிங்குசாமி தயாரிப்பதாகவும் அதை கமல் நடித்து, இயக்குவதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம், உத்தம வில்லன் படத்திலிருந்து ரமேஷ் அரவிந்தை நீக்கிவிட்டு, கமலையே அப¢படத்தை இயக்க சொல்லி இருப்பதாகவும் மற்றொரு தரப்பில் பேசப்படுகிறது. ஆனால் இதை எதையும் பட தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்யவில்லை.லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பது உறுதி. ரமேஷ் அரவிந்த் நீக்கப்பட்டதாக சொல்வது புரளிதான். மற்றபடி படத்தின் தலைப்பு, மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என பட வட்டாரங்கள் தெரிவித்தன.
Comments
Post a Comment