7th of September 2013
சென்னை::விஜய், ஷங்கரை அடுத்து 'ரோல்ஸ் ராய்ஸ்' காரை வாங்க இருக்கிறார் நகைச்சுவை நடிகர் சந்தானம். சந்தானத்துக்கு அப்படியொரு சுக்ர திசை இப்போது.
சென்னை::விஜய், ஷங்கரை அடுத்து 'ரோல்ஸ் ராய்ஸ்' காரை வாங்க இருக்கிறார் நகைச்சுவை நடிகர் சந்தானம். சந்தானத்துக்கு அப்படியொரு சுக்ர திசை இப்போது.
அவர் இல்லாத படங்களே இல்லை என்கிற அளவுக்கு வலைவிரித்து பிடித்து தன் படத்தில் போட்டுவிடுகிறார்கள் பெரிய ஹீரோக்கள். இயக்குநர்களும் தங்கள் படத்துக்கு வியாபார ரீதியில் பக்கபலம் இவர்தான் என்று வளைத்துப் பிடிக்கும் அளவுக்கு இமயம் போல் வளர்ந்துவிட்டார்.
இதனால் அவரது காட்டில் பண மழைதான். பெரிய நடிகர்கள் சில மாதங்கள் நடித்து வாங்கும் சம்பளத்தை மனிதர் 10 நாட்கள் நடித்து வாங்கிவிடுகிறார்.
இந்நிலையில் சந்தானம் ரூ.2 கோடிக்கு புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்குகிறாராம். இதற்காக அவர் சம்மந்தப்பட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருக்கிறார்.
பெரும் பணக்கரர்கள் மற்றும் வி.ஐ.பி.க்கள் பயன்படுத்தும் ரோல்ஸ் ராய்ஸ் காரை தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கர், நடிகர் விஜய், தயாரிப்பாளர் கல்பாத்தி’ எஸ்.அகோரம் ஆகியோர் மட்டுமே வைத்துள்ளனர்.
தற்போது சந்தானத்திற்கு இந்த கார் கிடைக்குமானால் தமிழகத்தில் ரூ.2 கோடிக்கு கார் வைத்திருக்கும் ஒரே காமெடி நடிகர் சந்தானம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment