புதைகுழியில் சிக்கிய நாயகன் நாயகி!!!

3rd of September 2013
சென்னை::சிறுவாணி”புதைகுழியில் சிக்கிய நாயகன் நாயகி
மருதமலை பிலிம்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு “சிறுவாணி”என்று பெயரிட்டுள்ளனர். கதாநாயகனாக சஞ்சய் நடிக்கிறார்.
கதாநாயகியாக ஐஸ்வர்யா நடிக்கிறார் மற்றும் நெல்லை சிவா,அனுமோகன்,சாமிநாதன்,பசங்கசிவகுமார்,ஜபக்,எலிசபெத் ,நளினிகாந்த் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – V.A.ராமலிங்கம்
பாடல்கள் – விவேகா,ரவிசங்கர்,அண்ணாமலை.
இசை – தேவா
 கலை – சந்தோஷ் கைபள்ளி ,நடனம் – S.L.பாலாஜி,ரவிதேவ் . ஸ்டன்ட் – ஸ்பீட் சையத் . எடிட்டிங் – G.சசிகுமார் . தயாரிப்பு நிர்வாகம் – மனோகர் இணை இயக்கம் – பையனூர் மோகன்
தயாரிப்பு – ரேஸ்கோர்ஸ் ரகுநாத்
திரைக்கதை, வசனம்,எழுதி இயக்குகிறார் ரேஸ்கோர்ஸ் ரகுநாத்.
படம் பற்றி இயக்குனர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத்……
படப்பிடிப்புக்காக சிறுவாணி காட்டு பகுதிக்குள் படப்பிடிப்பை நடத்தினோம்
கதாநாயகன் சஞ்சய் நாயகி ஐஸ்வர்யா இருவரும் காதலிப்பது போன்ற காட்சியை தூரத்தில் காமிரா வைத்து படமாக்கினோம் அவர்கள் காதல் வயப்பட்டு நடந்து செல்வது போன்ற காட்சி
திடீர் என்று இருவரும் புதைகுழியில் விழுந்து விட்டனர் பயத்தில் அவர்கள் கதற ஆரம்பித்தவுடன் காப்பாற்ற நாங்கள் ஓடினோம் நடந்த சம்பவத்தை பார்த்த ஊர் மக்கள் சிலர் எங்களுடன் இணைந்து இருவரையும் காப்பாற்றினார்கள்
அந்த ஊரை சேர்ந்த எனக்கே அந்த நிமிடத்தில் உயிர் போய் உயிர் வந்தது படத்தில் இது மாதிரி நிறைய சம்பவங்களை சந்தித் திருக்கிறோம் அந்தமானில் அட்டை கடிக்கு பலர் நிறைய ரத்தத்தை இழந்திருக்கிறோம் இவ்வளவு கஷ்ட பட்டு எடுத்த படமும்,பாடல் காட்சிகளும் சிறப்பாக வந்திருகிறது.தேவா சாரின் பாட்டு எங்களுக்கு பெரிய பலம் என்கிறார் இயக்குனர் ரேஸ்கோர்ஸ் ரகுநாத்.

Comments