சினிமா நூற்றாண்டு விழா துளிகள்!!!

25th of September 2013
சென்னை::விழா நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் நடிகர், நடிகையரைக் காண்பதற்காக பிற்பகல் 2 மணிக்கே பார்வையாளர்கள் அரங்கில் குவியத் தொடங்கினர்.
 
பிற்பகல் 3 மணிக்கு நடிகர், நடிகையர் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். நடிகர் அஜீத் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்ததோடு மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார்.
 
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் பதக்கம் பெறுவதற்காக அமிதாப் பச்சன் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். விழா அரங்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் மாலை 4.30 மணியளவில் நுழைந்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
 
விருதுபெற வந்திருந்த ஏவி.எம். சரவணன், வைஜெயந்தி மாலா, அஞ்சலிதேவி, பாடலாசிரியர் ஜாவித் அக்தர் உள்ளிட்டோருக்கு வணக்கம் தெரிவித்துக்கொண்டே வந்த ரஜினிகாந்த், அமிதாப்பைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் தழுவிக்கொண்டார்.
 
அவருக்கு அடுத்து அமர்ந்திருந்த தனது குருநாதர் கே.பாலசந்தர் காலில் விழுந்து ஆசிபெற்றார்
 
விழாவுக்கு வந்திருந்த பலரையும் கவர்ந்தது நடிகை ஸ்ரீதேவிதான். தனது கணவர் போனி கபூருடன் வந்திருந்த அவர் மிகவும் இளமையான தோற்றத்தில் இருந்தார்.
 
நடிகர்கள் சிவகுமார், ரஜினி, கமல், விஜய், சரத்குமார், அஜீத், கார்த்தி ஆகியோர் ஒரே வரிசையில் அமர்ந்திருந்தனர்.
 
நிறைவு விழாவுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை முதல்வர் ஜெயலலிதா சற்று நேரம் பார்த்து ரசித்தார்.

Comments