10th of September 2013
சென்னை::கதாநாயகியுடன் காதல்,கதாநாயகனை குளத்தில் தள்ளிவிட்ட இயக்குநர்!ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு
என் படத்தில் கருத்துக்களே இல்லை. ஜாலியா வாங்க, சந்தோஷமா போங்க என்று கதை சொல்கிற இயக்குனர்கள் ஒரு ரகம். ஜாலியா வாங்க, சந்தோஷமா போங்க. அப்படியே நாங்க சொல்ற கருத்தையும் எச்சரிக்கையையும் காதுல போட்டுக்கங்க என்று சொல்கிற இயக்குனர்கள் மற்றொரு ரகம். இதில் இரண்டாவது ரகத்தை சேர்ந்தவராக இருக்கிறார் டைரக்டர் கஸாலி.
ஹெச்3 சினிமாஸ் தயாரிப்பில், கஸாலி இயக்கி வரும் ‘சாய்ந்தாடு சாய்ந்தாடு’ திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. காரைக்குடி, பேராவூரணி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படம் வெறும் காதல் படம் மட்டுமல்ல, அதைவிட சுவாரஸ்யமான, அதிர்ச்சியான, திகிலான பல சம்பவங்களை உள்ளடக்கியது. அப்படியென்றால் படத்தின் மைய கருத்து என்ன? நாமெல்லாம் இவ்வளவு நாளும் இப்படியா பயன்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று பொதுமக்கள் அதிர்ச்சியாகிற மாதிரியான சில உண்மை சம்பவங்களைதான் இந்த படத்தின் மையக்கருவாக அமைத்திருக்கிறாராம் கஸாலி.
ஆதர்ஸ், அனு கிருஷ்ணா ஜோடியாக நடிக்கிறார்கள். படத்தின் மையக்கதை ஒரு மிக முக்கியமான விஷயத்தை அலசினாலும், படம் நெடுக காதலும், சுவாரஸ்யமும், காமெடியும் வழிந்தோடுகிற மாதிரி திரைக்கதையை அமைத்திருக்கிறார் கஸாலி.
ஹீரோவிடம்.நீ என் மேல் எவ்வளவு அன்பு வச்சுருக்கே, பார்க்கலாம்என்று சவால் விடும் ஹீரோயின் அதை பரிசோதிப்பதற்காக ஒற்றை ரூபாயை குளத்தில் போட்டு விடுகிறாள். எங்கே… என் மேல நிஜமாகவே அன்பிருந்தா இந்த ஒத்த ரூபாயை எடுத்துக் கொடு என்று அவள் சொல்கிறாள், இப்படி ஒரு காட்சி. குளத்தைச் சுற்றி வேடிக்கை பார்க்க வந்தவர்கள் கூட்டமாக நிற்க, நீண்ட நேரமாக குளத்தில் இறங்கத் தயங்கிய ஹீரோவை எதிர்பாராமல் இயக்குநர் கஸாலி தள்ளிவிட, குளத்துக்குள் விழுந்த ஹீரோ தள்ளிவிட்டது யார் என்று முறைத்துப்பார்க்க, இயக்குநர் சிரித்தபடி கூலாக டேக் என்றிருக்கிறார். அந்த பரபரப்பில் சில நிமிடங்கள் சைலண்டான கூட்டம் பின்பு சிரித்தபடி வேடிக்கை பார்த்தார்களாம்.
ஹீரோவும் வேறு வழி இல்லாமல் ஹீரோயின் போட்ட ஒத்த ருபாயை ஒருநாள் முழுக்க தண்ணிருக்குள் தேடித்தேடி எடுத்தே விட்டாராம்..
ஆதர்ஸ், அனு கிருஷ்ணாவுடன் ஷிவானி, சுப்பு பஞ்சு, நெல்லை சிவா, கிரேன் மனோகர், காதல் சுகுமார், அல்வா வாசு, பாவா லட்சுமணன், கிங்காங், சின்னராசு, நித்யா, உமா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
H3 CINEMAS
SAAINDHAADU SAAINDHAADU
தொழில் நுட்ப கலைஞர்கள்
இசை – ஏ.ஜே.அலிமிர்சா
ஒளிப்பதிவு – சிவா
எடிட்டிங் – வி.ஜெய்ஷங்கர்
கலை- நந்தகுமார்
பப்ளிசிடி எக்சிக்யூட்டிவ் – முருகன் மந்திரம்
நடனம் – துபாய் நடன கலைஞர்கள்
சண்டை பயிற்சி – மிரட்டல் செல்வம்
பாடல்கள் – சாரதி, கஸாலி
மக்கள் தொடர்பு – ஆர்.எஸ்.அந்தணன்
கிராபிக்ஸ் – விஎஃப்எக்ஸ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
கஸாலி

Comments
Post a Comment