13th of September 2013
சென்னை::25 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் குமார் முதல் முறையாக தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கும் திரைப்படம் மதயானைக் கூட்டம்.
இதில் கதிர் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறார். இவர்களுடன் எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி, விஜி சந்திரசேகர் உட்பட பலர் நடிக்கின்றனர். ரவி.கே.சந்திரன் உதவியாளர் ராகுல் தர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
விக்ரம் சுகுமார் எழுதி இயக்குகிறார். இவர் பாலுமகேந்திராவிடம் இணை இயக்குனராகவும், ஆடுகளம் படத்தில் வசனகர்த்தா மற்றும் இணை இயக்குனராகவும் பணியாற்றியவர். ரகுநந்தன் இசையமைக்கிறார்.
தேனி மாவட்டத்தில் உள்ள முக்கியமான இரு குடும்பங்களில் நடக்கும் சம்பவங்கள், பழக்க வழக்கங்களை மையமாகக் கொண்டு படம் உருவாகிறது.
இதன் முழுப்படப்பிடிப்பும் தேனி மற்றும் கேரளாவில் படமாகியுள்ளது. இப்படத்தின் இசை இம்மாதமும், படம் அடுத்த மாதத்திலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Comments
Post a Comment