10th of September 2013
சென்னை::மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆனால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று மல்லுக்கட்டி வந்த வடிவேலு, ஒருவழியாக ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிப்பில் கஜபுஜகஜ தெனாலிராமன் என்ற படத்தில் கதாநாயகனாக கமிட்டானார். பட்டாபட்டி படத்தை இயக்கிய யுவராஜ் படத்தை இயக்கி வந்தார். ஆனால், தீடீரென்று இயக்குனருக்கும், ஹீரோவுக்குமிடையே ஏற்பட்ட சலசலப்பு காரணமாக தெனாலிராமன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஏற்கனவே வடிவேலுவை காமெடியனாக வைத்து படம் பண்ணிய சில இயக்குனர்கள் மீண்டும் காமெடியனாக நடிக்க வருமாறு தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்ததால், தற்போது காமெடியனாக களமிறங்கி விட்டார் வடிவேலு. முதல் படமாக எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படங்களை இயக்கிய திருமுருகன் இயக்கத்தில் நடிக்கிறார்.
இந்த இரண்டு படங்களிலுமே பரத்துடன் இணைந்து வடிவேலு செய்த காமெடி காட்சிகள் பெரிய அளவில் ரீச் ஆனது. அதனால், இந்த முறையும் பரத்-வடிவேலு காம்பினேஷனில் பெரிய அளவு காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை உருவாக்கியுள்ளாராம் திருமுருகன். புது மாப்பிள்ளை பரத், வடிவேலுவுடன் கைகோர்ப்பது மூலம் தனது மார்க்கெட் இன்னும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கிறார்.

Comments
Post a Comment