11th of September 2013
சென்னை::சன்னி லியோனுடன் நடிப்பது உண்மைதான். ஆனால் அது ஆபாச படம் கிடையாது என்றார் பரத். இது பற்றி நடிகர் பரத் நேற்று கூறியதாவது:
சமீபத்தில் நான் நடித்த ‘555Õ படம் திரைக்கு வந்து நல்ல பெயர் பெற்று தந்தது. இதற்கிடையில் கடந்த ஒரு வருடமாக மருத்துவ மாணவி ஜெஸ்லி என்பவரை காதலித்தேன். இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று முன்தினம் எங்களது பதிவு திருமணம் நடந்தது. வரும் 14ம் தேதி திருமண வரவேற்பு நடக்கிறது. மனைவி வந்த நேரம் எனக்கு பட வாய்ப்புகள் கிடைத்திருக்கிறது.
ஜாக்பாட்Õ என்ற இந்தி படத்தில் சன்னி லியோனுடன் நடிக்கிறேன். கனடாவில் வசித்த இந்திய பெண் அவர். இதற்கு முன் கனடாவில் நீல படங்களில் நடித்து வந்தவர். தற்போது அத்தகைய படங்களுக்கு முழுக்கு போட்டு இந்தி சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார்.
அவருடன் ஜோடியாக நடிப்பதுபற்றி கேட்கிறார்கள். Ôஜாக்பாட்Õ படம் ‘அந்த மாதிரிÕ படம் இல்லை. கப்பலுக்குள் நடக்கும் கதை. பந்தயம் கட்டும் 4 பேருக்குள் நடக்கும் கதை. இதில் எனக்கு ஜோடியாக சன்னி நடிக்கவில்லை. அவர் படத்தில் நடிப்பதால் என்னை பாலிவுட் வட்டாரம் திரும்பி பார்க்க ஆரம்பித்துள்ளது. அவரால் மற்றொரு இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. சன்னியுடன் நடிப்பதை கவுரவ குறைவாக நினைக்கவில்லை. தமிழில் ‘எம் மகன்Õ படத்துக்கு பிறகு மீண்டும் திருமுருகன் இயக்கத்தில் நடிக்க உள்ளேன்.
Comments
Post a Comment