பேஷன் ஷோவில் ஆபாசமாக வந்து நின்ற சமீரா ரெட்டி!!!

21st of September 2013
சென்னை::தமிழில் வாரணம் ஆயிரம், அசல், வேட்டை, நடுநிசி நாய்கள் போன்ற படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி. இவருக்கு தற்போது தென்னிந்திய மொழிகளில் படவாய்ப்பில்லை. ஆனால், இந்தியில் அதிகப்படியான படங்களில் நடித்து வருகிறார். அப்படி நடிக்கும் படங்களில் படுகவர்ச்சியாக நடித்து அங்குள்ள நடிகைகளுக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கிறார்.

இதனால் அங்குள்ள படாதிபதிகள் சிறந்த கமர்சியல் நடிகை என்ற முத்திரையை சமீரா மீது குத்தி விட்டனர். ஆக, அவரது படக்கூலியும் தற்போது கிடுகிடுவென்று உயர்ந்து நிற்கிறதாம். அதனால்தான் மற்ற மொழிகளில் நடிப்பது பற்றி யோசிக்காமல் முழுநேர இந்தி நடிகையாகியிருக்கிறாராம் சமீரா ரெட்டி.

இந்தநிலையில், சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு பேஷன் ஷோவில் சமீராவும் கலந்து கொண்டாராம். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களைவிட படு ஆபாசமாக டிரஸ் அணிந்திருந்தாராம் சமீராரெட்டி. அதைப்பார்த்து விழாவுக்கு வந்திருந்தோர் ஆட்சேபணை தெரிவித்தார்களாம். ஆனால் சமீராவோ, பேஷன் ஷோவில் இப்படி உடையணிந்து நடந்தால்தான் பியூட்டி. இப்படித்தான் ஹாலிவுட் நடிகைகள் வருவார்கள். அதை பின்பற்றித்தான் நானும் வந்திருக்கிறேன். அதனால் அழகை அருவருப்பாய் பார்க்காமல் ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்று உரக்க குரல் கொடுத்தாராம் சமீரா.

இதையடுத்து இந்த விவகாரத்தை சர்ச்சையாக்க நினைத்தவர்கள் வாயடைத்து நின்றார்களாம்.

Comments