2nd of September 2013
சென்னை::கே.வி. ஆனந்த் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் தனுஷ், கார்த்திக், புதுமுகம் அமிரா மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு ‘அனேகன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை::கே.வி. ஆனந்த் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் தனுஷ், கார்த்திக், புதுமுகம் அமிரா மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு ‘அனேகன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘மாற்றான்’ படங்களுக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் படம் இது.தனுஷ் ஜோடியாக மும்பையைச் சேர்ந்த அமிரா அறிமுகமாகிறார். ‘ராவணன்’ படத்திற்குப் பிறகு கார்த்திக் ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் நடிக்கிறார்.
அதுல் குல்கர்னி, ஆசிஷ் வித்யார்த்தி, ஜெகன் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
‘அனேகன்’ என்றால் ‘ஒன்றானவர், உருவில் பலரானவன்’ என்று பொருள்.
“நமச்சிவாய வாழ்க..” என்று துவங்கும் திருவாசகப் பாடலில் கடைசி
வரியில்.. “ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க..” என்று சொல்கிறார் மாணிக்கவாசகர்.
வரியில்.. “ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க..” என்று சொல்கிறார் மாணிக்கவாசகர்.
தனுஷ் நடிக்கும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது இதுவே முதல் முறை. ஓம்பிரகாஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இரட்டை எழுத்தாளர்கள் சுபா, கே.வி.ஆனந்துடன் இணைந்து இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார்கள்.
காதலும், நகைச்சுவையும், சண்டைக்காட்சிகளும் பின்னிப்படர்ந்த கதையில், தனுஷ் இதுவரை நடிக்காத தோற்றங்களில் தோன்றி கலக்கவிருக்கிறார்.
வியட்நாம், கம்போடியா, மலேசியா, பொலிவியா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
பல வெற்றிப் படங்களையும், தற்போது ஐந்து தமிழ்ப் படங்களைத் தயாரித்து வரும் ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் இப்படத்தைத் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.
Comments
Post a Comment