ராம்சரணை கெட்டியாக பிடித்துக்கொண்ட காஜல்அகர்வால்!!!

19th of September 2013
சென்னை::தற்போது இந்தியில் படமே இல்லாமல் தமிழே கதியென்று நடித்து வருகிறார் காஜல்அகர்வால். ஆனால் அப்படி அவர் நடித்து வந்த ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா ஆகிய இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. ஆனால் அடுத்தபடியாக காஜலிடம் கால்சீட் கேட்டிருந்த தமிழ்ப்படங்கள் எதுவும் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை.

அதனால் சென்னையிலிருந்து இடம்பெயர்ந்த காஜல், ஐதராபாத்தில் முகாம் போட்டுள்ளார். காரணம், ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜாவுடன் இவர் ஜோடி சேர்ந்த மகதீரா மெகா ஹிட் ஆனதால் அதையடுத்து மீண்டும் ராம்சரணுடன் நாயக் என்ற படத்தில் நடித்தார் காஜல். அப்படமும் ஹிட்தான். அதனால், காஜலை தனது ராசியான நடிகை என்று நினைக்கிறாராம் ராம்சரண்.

இந்த நிலையில், தனக்கு சரியானபடி படங்கள் இல்லாத விவரத்தை அவரிடம் காஜல் சொன்னதும், உடனே ஐதராபாத்துக்கு அழைத்து தான் தற்போது நடிக்கும் புதிய படமொன்றில் ஜோடி சேர்த்து விட்டாராம். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராம்சரணை கெட்டியாக பிடித்துக்கொண்ட காஜல், இன்னும் சில மேல்தட்டு ஹீரோக்களுக்கும் குறி வைத்துக்கொண்டிருக்கிறாராம்.

Comments