ஒருவழியாக சந்தானத்துக்கு ஜோடியாகும் மும்பை மாடல்!!!

26th of September 2013
சென்னை::ஒருவழியாக,சந்தானத்துக்கு ஜோடி கிடைத்து விட்டது. அவர் ஹீரோ அவதாரம் எடுத்துள்ள, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில், அவருக்கு ஏற்ற ஜோடியை, வலை வீசித் தேடி வந்தனர், படக் குழுவினர். கோடம் பாக்கத் தில், யாரும் சிக்காததால், அடுத்த கட்டமாக, மும்பைக்கும் வலை விரித்தனர்.
 
அப்போது தான்,மும்பையைச் சேர்ந்த, பிரபல மாடல்  அழகி, அஸ்னா ஜாவேரி, சந்தானம் குழுவினரின் கண்களில் தென்பட்டார்.உடனடியாக, அவரை மடக்கி சந்தானத்துக்கு,அவரை ஜோடியாக்கி விட்டனர்.இந்த அஷ்மா,சினிமாவுக்கு வேண்டுமானால்,புதிதாக இருக்க லாம். ஆனால்,ஏற்கனவே, பல விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

Comments