ஆதலால் புகார் செய்வீர்…’ – போலீஸுக்குப் போன மனிஷா!!!

24th of September 2013
சென்னை::தேசிய விருதுப் படமான ‘வழக்கு எண் 18/9′ல் அறிமுகமான மனிஷா, புதிய புகாரோடு போலீஸுக்குப் போயிருக்கிறார். அந்தப் புகார், சமூக வலை தளங்களில் அவர் பெயரில் போலி அக்கவுண்டுகள் ஆரம்பித்து அவர் வெளியிட்டதாக செய்திகள் பரப்பும் நபர்கள் மேல் பாய்கிறது.
இது தொடர்பாக தன் மக்கள் தொடர்பாளர் மூலம் மீடியாக்களுக்கு அவர் அனுப்பிய செய்தியிலிருந்து…
 
நான் எந்த சமூக வலை தளத்திலும் இல்லை. ஆனால் என் பெயரில் போலி அக்கவுண்டுகள் வைத்து சிலர் நான் வெளியிடுவது போல் படங்களும் செய்திகளும் வெளியிடுகிறார்கள். அவற்றுக்கும் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அது குறித்து நான் சைபர் கிரைம் போலீஸில் புகார் செய்துள்ளேன்.
என் படங்கள் பற்றிய தகவல்களை அறிய என் மீடியா தொடர்பாளரைத் தொடர்பு கொள்ளவும்..!”
 
சமீபத்தில் ‘ஆதலால் காதல் செய்வீர்’ மூலமும் நல்ல பெயர் பெற்றிருக்கும் மனீஷா, புகாரோடு போலீஸுக்குப் போக நேர்ந்தது வருத்தமான விஷயம்தான். ஆதலால் மனீஷா பற்றிய சமூக வலை தள செய்திகளை நம்பாதீர்..!
 

Comments