நடிகர் ஆனார் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார்!!!

17th of September 2013
சென்னை::இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தற்போது மதயானை கூட்டம் என்ற படத்தை தயாரித்து வருகிறார். அடுத்து அவர் தயாரிக்கும் படத்தில் அவரே நடிக்க இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த தலைவா படத்தில் விஜய்யுடன் ஒரு பாடல் காட்சியில் தலைகாட்டினார். இப்போது ஹீரோவாக நடிப்பதற்கு முன்பு ஒரு பாடலை பாடி அதற்கு ஆட்டமும் போட்டிருக்கிறார்.

கனவுகொட்டகை என்ற படத்தை தயாரித்து வரும் யூனிட், இந்திய சினிமாவின் நூற்றாண்டை பெருமைப்படுத்தும் வகையில் நூற்றாண்டு கனவுகள் என்ற பெயரில் ஒரு பாடல் ஆல்பத்தை உருவாக்கி உள்ளனர். இந்திய சினிமாவின் ஜாம்பவான்களின் பெருமையை சொல்லும் விதமாக இந்த ஆல்பம் உருவாகி உள்ளது.  ஜி.வி.பிரகாஷ் விதவிதமான உடைகள் அணிந்து பாடி ஆடியுள்ளார். பாடலை மதன் கார்க்கி எழுதி உள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். பாடல் காட்சியை இரா.செழியன் படமாக்கி இருக்கிறார். எம்.பிரபாகரன் அரங்கம் அமைத்திருக்கிறார். கனவுக்கொட்டகை படத்தின் இயக்குனர் அர்ச்சில் மூர்த்தி பாடல் காட்சியை இயக்கி உள்ளார். சிவா நடனம் அமைத்துள்ளார். நூற்றாண்டு விழாவுக்கு முன்னதாக தனியா ஒரு விழா நடத்தி வெளியிட இருக்கிறார்கள்.

Comments