29th of September 2013
சென்னை::ரம்யா நம்பீஸனின் உடல்வளம் மட்டுமல்ல குரல்வளமும் ரசிகர்களை ஈர்க்கக் கூடியது. மலையாளத்தில் சில பாடல்களை ரம்யா நம்பீஸன் பாடியிருக்கிறார். முதல் முறையாக தமிழில் பாண்டியநாடு படத்தில் அவரது குரலை பயன்படுத்தியிருக்கிறார் டி.இமான்.
நடிகைகளின் குரல் வளத்துக்கு முதலில் செவி சாய்ப்பவர்
தேவி ஸ்ரீபிரசாத். இந்தமுறை டி.இமான் முந்திக் கொண்டார். ரம்யா நம்பீஸனின் குரலில் ஒரு பாடலை பதிவு செய்திருக்கிறார். விஜய் சேதுபதி நடிக்கும் ரம்மி படத்திலும் ரம்யா நம்பீஸன் ஒரு பாடல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதலில் வெளிவரவிருப்பது பாண்டியநாடு பாடல்தான்.
ரம்யா நம்பீஸன் அளவுக்கு குரல் வளம் கொண்டவர் நஸ்ரியா நசீம். அவருக்கும் திரையில் பாடும் ஆசை இருக்கிறது. நம்பீஸனுக்கு கிடைத்த வாய்ப்பு நஸ்ரியாவுக்கு எப்போது கிடைக்கும்?
|
Comments
Post a Comment