கன்னிபருவத்திலே உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும், பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித் நடிகர் ராஜேஷ் மகன் ஹீரோவாக அறிமுகம்!!!
17th of September 2013
சென்னை::கன்னிபருவத்திலே உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும், பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகர் ராஜேஷ். இவருக்கு இரண்டு வாரிசுகள். மூத்தவர் பெண், இவருக்கு திருமணமாகிவிட்டது. இளையவர் திலீப். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். சினிமாவுக்கு வர வேண்டும் என்பதற்காக கூத்துபட்டறையிலும், தனியார் நடிப்பு பயிற்சியிலும் ஒன்றரை வருடம் விஷேச பயிற்சி எடுத்துள்ளார்.
மலையாள இயக்குநர் பிரேம் ‘பயணங்கள் தொடர்கின்றன’ என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில்தான் திலீப் ஹீரோவாக அறிமுகமாகிறார். படத்தின் கதையை தயாரிப்பாளரிடம் சொல்லி ஓ.கே., வாங்கியவுடன் அதை திலீப்பிடம் சொல்லியுள்ளார் இயக்குநர். ஆனால் அன்று இரவே திலீப்பின் அம்மா இறந்து விட்டார். இது திலீப்பை ரொம்பவே பாதித்தது. பின்னர் அதிலிருந்து மீண்டு வர திலீப்புக்கு கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆகி இருக்கிறது.
இந்த ஒன்றரை வருடத்தில் நடிப்புகாக விஷே பயிற்சியெல்லாம் பெற்றுள்ளார். மேலும் 100 கிலோவாக இருந்த தனது எடையை 75 கிலோவாக குறைத்து இயக்குநர் முன் வந்து நின்றுள்ளார். பின்னர் இயக்குநர் பிரேம், சினிமாவுக்காக திலீப்பின் பெயரை தீபக் என்று மாற்றியுள்ளார். ‘பயணங்கள் தொடர்கின்றன’ படத்தின் பூஜை சென்னையில் துவங்கியது. தீபக் ஜோடியாக கேரள நடிகை அஞ்சனா மேனன் நடிக்கிறார். கேரளாவில் தொடங்கி ஆந்திரா, சென்னை உள்ளிட்ட இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. விழாவில் பாலுமகேந்திரா, பாக்யராஜ், விக்ரமன், கேயார் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டு தீபக்கை வாழ்த்தினர்.
தனது மகன் ஹீரோவாக அறிமுகமாவது பற்றி ராஜேஷ் கூறும்போது, என்னைப்போலவே என் மகனும் சினிமாவுக்கு வந்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அவன் இன்னும் பல படங்களில் நடித்து உயரத்திற்கு செல்ல வேண்டும் என்றார்.

Comments
Post a Comment