ஆபாச உடை சர்ச்சை சமீரா ரெட்டி கோபம்!!!

 18th of September 2013
சென்னை::சென்னை:ஆபாச உடை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றதாக சர்ச்சை கிளம்பியதால் கோபம் அடைந்தார் சமீரா ரெட்டி.வாரணம் ஆயிரம், அசல், நடுநிசி நாய்கள் படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. மும்பையில் நேற்று நடைபெற்ற பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் அரைகுறை ஆடையுடன் தோன்றினார்
 
சமீரா ரெட்டி. இந்த உடை ஆபாசமாக இருந்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இது குறித்து சமீரா ரெட்டி கூறியது:பேஷன் நிகழ்ச்சியில் எந்த மாதிரி உடை அணிய வேண்டும், மற்ற விழாவில் எந்த உடை அணிய வேண்டும் என்பதெல்லாம் எனக்கு தெரியும். அதை யாரும் எனக்கு சொல்லித் தர தேவையில்லை. பேஷன் நிகழ்ச்சிய¤ல் கவர்ச்சியான உடையில்தான் தோன்றினேன். அது சிலருக்கு ஆபாசமாக தெரிந்தால் அது பற்றி நான் கவலைப்பட மாட்டேன்.
 
ஹாலிவுட்டில் இதுபோன்ற ஆடைகளில் நடிகைகள் தோன்றுவது வழக்கம். அதுவும் பேஷன் நிகழ்ச்சியில் கவர்ச்சியாக தோன்றாமல் எப்படி இருக்க முடியும்? இவ்வாறு சமீரா கூறினார்.தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழியிலும் தொடர்ந்து நடித்த சமீராவுக்கு இப்போது வாய்ப்புகள் இல்லை. இதனாலேயே திடீரென இதுபோன்ற ஆடையில் வந்து திரையுலகினரின் கவனத்தை அவர் ஈர்த்ததாக பாலிவுட் மீடியா கருதுகிறது.

Comments