16th of September 2013
சென்னை::அரசியலில் குதித்து எம்பி ஆகிவிட்ட ‘குத்து ரம்யா, விரைவில் நடிப்புக்கு முழுக்கு போட உள்ளார்.‘வாரணம் ஆயிரம், ‘குத்து உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருப்பவர் ரம்யா. இவர் கர்நாடகா இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.பி. ஆகிவிட்டார்.
கடந்த செவ்வாய்கிழமை ரம்யா பெங்களூரில் விதான் சவுதா அருகில் காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது டுவீலரில் சென்றுக்கொண்டிருந்த வக்கீல் ஒருவரை அடையாளம் தெரியாத வாகனம் இடித்துவிட்டு சென்றது. இதில் அந்த நபர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ரம்யா. உடனடியாக தனது காரை நிறுத்தி, அதில் காயம் அடைந்தவரை ஏற்றிச்சென்று மருத்துவமனையில் சேர்த்தார். 2 மணி நேரம் அங்கேயே காத்திருந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த ரம்யா, பிறகு வக்கீல் மனைவியிடம் சிகிச்சைக்கான பணத்தையும் அளித்துவிட்டு சென்றார்.
அரசியல் மற்றும் சமூக சேவையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் ரம்யா விரைவில் திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளாராம். இதனால் நடிப்புக்கு முழுக்கு போட உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நடித்து வரும் 3 படங்களின் படப்பிடிப்புகளையும் அரசியல் பணி காரணமாக தள்ளி வைத்திருக்கிறார். அப்படங்களை முடித்தபிறகு நடிப்புக்கு முழுக்கு போடப்போவதாக ரம்யாவே திரையுலகினரிடம் தெரிவித்திருக்கிறார்.
Comments
Post a Comment