7th of September 2013
சென்னை::வெள்ளாவி தேவதை டாப்ஸிக்கு பாலிவுட்டில் டப்பிங் பேச அழைப்பு வந்துள்ளது. தமிழில் ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் டாப்ஸி. இதில் டாப்ஸிக்கு ஆண்ட்ரியா டப்பிங் பேசினார். தமிழ், தெலுங்கில் பிஸியாக இருக்கிறார் டாப்ஸி .
இப்போது தமிழில் ‘முனி3′, ‘ஆரம்பம்’ என இரு படங்களிலும், தெலுங்கில் ‘ஷேடோ’, ‘சாகசம்’ என இரு படங்களிலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
சமீபத்தில் சித்தார்த்துடன் ‘சாஷ்மி பத்தோர்’ எனும் இந்திப் படத்தில் நடித்தார். படமும் ஹிட்டானது. இப்போது பாலிவுட்டிலும் ராசியான நடிகை ஆகிவிட்டார் டாப்ஸி.
இந்த சமயத்தில் பாலிவுட்டில் இருந்து டாப்ஸிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், இது நடிப்பதற்காக இல்லை. டப்பிங் பேசுவதற்காக.
‘ரிட்டிக்’ என்ற ஹாலிவுட் படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. இதில் ஹீரோயின் கேரக்டருக்கு இந்தியில் டப்பிங் பேசும்படி டாப்ஸிக்கு அழைப்பு வந்துள்ளது.
டாப்ஸியும் இதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு உள்ளார். இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்புகளுக்கும் டாப்ஸியையே டப்பிங் பேச வைக்கலாமா என ஹாலிவுட் படக் குழு யோசித்து வருகிறதாம்.
Comments
Post a Comment