18th of September 2013
சென்னை::பாடல் காட்சியில் படு கவர்ச்சியாக ஜீவாவுடன் நெருங்கி நடித்திருக்கிறார் ஆண்ட்ரியா. 'பச்சைக்கிளி முத்துச்சரம்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'விஸ்வரூபம்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆண்ட்ரியா. எந்த படத்திலும் கவர்ச்சியாக நடித்ததில்லை. ஆனால் முதல்முறையாக ஒரு பாடலில் படு கவர்ச்சியாகவும் ஜீவாவுடன் நெருங்கியும் நடித்திருக்கிறார்.
என்றென்றும் புன்னகை' படத்துக்காக இந்த பாடல் காட்சியில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். படத்தில் கதாநாயகி த்ரிஷா. செகண்ட் ஹீரோயின்தான் ஆண்ட்ரியா. ஆனால் இந்த பாடல் காட்சி மூலம் த்ரிஷாவை ஆண்ட்ரியா ஓவர்டேக் செய்துவிடுவார் என பட யூனிட்டார் பேசிக்கொள்கிறார்கள். ஆண்ட்ரியா மழையில் நனைந்தபடி கிளு கிளுப்பாக ஆடிப்பாடும் காட்சியாக இது உருவாகியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.
Comments
Post a Comment