நஸ்ரியாவை ஜோடியாக்க இளம் ஹீரோக்கள் இயக்குனர்களை நச்சரிப்பு!!!


16th of September 2013
சென்னை::நஸ்ரியாவை ஜோடியாக்க இளம் ஹீரோக்கள் இயக்குனர்களை நச்சரிப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது. நேரம் படத்தில் அறிமுகமானவர் நஸ்ரியா நாசிம். இவர் ஆர்யாவுடன் ராஜா ராணி, ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்காஹ், தனுஷுடன்
நய்யாண்டி, ஜீவாவுடன் நீ நல்லா வருவடா ஆகிய படங்களில் நடிக்கிறார்.
 
இது தவிர ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திலும் நடிக்க பேச்சு நடக்கிறது. இந்த படங்களில் எல்லாம் நஸ்ரியா நடிப்பதற்கு ஹீரோக்கள் சிபாரிசு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இளம் ரசிகர்களுக்கு நஸ்ரியாவை பிடித்திருக்கிறது. அதேபோல் இளம் ஹீரோக்களுக்கும் நஸ்ரியாவை அதிகம் பிடித்திருக்கிறதாம். இதனால் இயக்குனர்களிடம் நஸ்ரியாவை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்ய நச்சரிக்கிறார்களாம்.
 
நேரம் படத்தில் ரூ.10 லட்சத்துக்குள் சம்பளம் வாங்கிய நஸ்ரியா, இப்போது ஒரு படத்துக்கு ரூ.40 லட்சம் சம்பளம் கேட்கிறார். அடுத்ததாக வெளியாகும் 2 படங்கள் ஓடினால் ரூ.50 லட்சத்தை தாண்டி சம்பளம் வாங்கவும் திட்டம் போட்டுள்ளாராம்.

Comments