விஷால் நடித்துள்ள மத கஜ ராஜா ரிலீஸ் திடீர் தள்ளிவைப்பு!!!

5th of September 2013
சென்னை::விஷால் நடித்துள்ள மத கஜ ராஜா ரிலீஸ் திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விஷால், அஞ்சலி, வரலட்சுமி நடித்துள்ள படம் மத கஜ ராஜா. சுந்தர்.சி. இயக்கி உள்ளார். இப்படத்தை விஷால் வாங்கி ரிலீஸ் செய்கிறார். நாளை ரிலீஸ் ஆவதாக இருந்தது. இதற்கிடையில் பட ரிலீஸில் வினியோகஸ்தர்களுடன் பிரச்னை எழுந்தது. இதையடுத்து ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. 
 
இதற்கிடையில் படம் வெளியிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஷாலுக்கு நேற்று இரவு உடல் நலம் பாதித்தது. உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். இந்நிலையில் அவர் நடித்து வந்த பாண்டிய நாடு ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டது. இதுபற்றி விஷால் கூறும்போது,தொடர்ந்து 10 நாட்களாக இரவு ஷூட்டிங்கில் பங்கேற்றதுடன், மத கஜ ராஜா பட விளம்பர நிகழ்ச்சியிலும் பங்கேற்றேன். இதில் சோர்வு ஏற்பட்டது.
 
உடலில் நீர்சத்து குறைந்ததன் காரணமாகவும், டென்ஷனாலும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். தற்போது உடல் நலம் தேறி வீடு திரும்பி இருக்கிறேன். டாக்டர்கள் ஓய்வு எடுக்க சொல்லி உள்ளனர் என்றார்.

Comments