16th of September 2013
சென்னை::குத்துப்பாட்டு வைப்பதிலிருந்து விடுதலையாகிவிட்டேன் என்றார் மிஷ்கின்.டைரக்டர் மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி படத்தில் ‘
வாள மீனுக்கும் வெலங்கு மீனுக்கும் கல்யாணம்.. பாடலுக்கு மாளவிகா, ‘அஞ்சாதே படத்தில் ‘கத்தாழ கண்ணால பாடலுக்கு ஸ்னிக்தா, Ôயுத்தம் செய் படத்தில் கன்னத்தீவு பெண்ணா பாட்டுக்கு நீது சந்திரா ஆடிய குத்துப்பாடல்கள் பிரபலமானது. குத்துப்பாடல் எதுவும் இல்லாமல் மிஷ்கின் இயக்கி நடித்திருக்கும் படம் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.
இளையராஜா இசை. படத்தில் பாடல்கள் இல்லாததால் இதில் இடம்பெறும் 10 டிராக்குகள் கொண்ட பின்னணி இசை சிடியை நேற்று வெளியிட்டார். அப்போது மிஷ்கின் பேசியது:
இது ஒரு இரவில் நடக்கும் கதை. தவறு செய்த ஒருவன் அதன் பின்னர் அனுபவிக்கும் விளைவுகளை படம் சொல்கிறது. வழக்கமாக எனது படங்களில் விநி யோகஸ்தர்கள் வர்த்தக நோக்கத்துக்காக குத்து பாடல் கேட்பார்கள். கதைக்கு தேவை படாவிட்டாலும் ஹீரோயின் யார் என்று கேட்பார்கள். அதுபோன்ற கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு இப்படத்தை சுதந்திரமாக எடுத்திருக்கிறேன். இதில் குத்து பாடல் கிடையாது, ஹீரோயின் கிடையாது.
படத்தில் 90 சதவீத காட்சிகளில் வசனம் கூட கிடையாது. 250 பக்க ஸ்கிரிப்ட்டில் 15 பக்கம் மட்டுமே வசனம் எழுதி இருக்கிறேன். மற்றதெல்லாம் அழுத்தமான காட்சிகள்தான். ஸ்ரீ, அதித்ய மேனனுடன் நானும் மற்றும் பலரும் நடித்திருக்கிறோம். இம்மாதம் 20ம்தேதி படம் ரிலீஸ் என்றார்.விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் மற்றும் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
Comments
Post a Comment