14th of September 2013
சென்னை::தமிழ் சினிமாவில் கேரளத்து நடிகைகளின் ஆதிக்கம் எப்போதுமே இருந்துதான் வந்திருக்கிறது. அந்த வகையில் அம்பிகா, ராதாவுக்குப்பிறகு அசின், நயன்தாரா உள்ளிட்ட சில நடிகைகள் கோடம்பாக்கத்தில் என்ட்ரியாகி கடந்த பத்தாண்டுகளாக நீடித்து வரும் நடிகைகளாக இருக்கிறார்கள். ஆனால் இவர்களையடுத்து தற்போது புற்றீசல்கள் போல் கோடம்பாக்கத்தை நோக்கி கேரளத்து பைங்கிளிகள் படையெடுப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது, இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் பரபரப்பான நடிகையாக மார்க்கெட்டில் இருக்கிறார் நயன்தாரா. அவருக்கடுத்தபடியாக, தலைவா படத்தில் நடித்த அமலாபாலும் இப்போது முன்னணி நடிகையாகி விட்டார். ஆனால், இவர்கள் இரண்டு பேரையும் தொடர்ந்து என்ட்ரி கொடுத்துள்ள லட்சுமிமேனன், நஸ்ரியா நசீம் ஆகிய இருவரது வளர்ச்சி படு வேகமாக உள்ளது.
இரண்டு பேருமே தலா அரை டஜன் படங்களை கைப்பற்றி கோடம்பாக்கத்தின் முன்னணி இளவட்ட நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களது அதிரடி பிரவேசத்தினால் மார்க்கெட்டில் இருக்கும் காஜல்அகர்வால், அஞ்சலி, டாப்ஸி, பிந்துமாதவி போன்ற நடிகைகளே சரியான படவாய்ப்புகள் இன்றி அண்டை மாநிலங்களை நாடிச்செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
ஆக, தற்போது தமிழ் சினிமாவின் பெருவாரியான படங்களை நயன்தாரா, அமலாபால், லட்சுமிமேனன், நஸ்ரியா நசீம் போன்ற கேரள நடிகைகளே கைப்பற்றி வைத்துள்ளனர். அதனால் எப்போதும் போல் இப்போதும் கேரளத்து நடிகைகளின் கையில்தான் கோடம்பாக்கம் உள்ளது.

Comments
Post a Comment