ஹரி இயக்கத்தில் விக்ரம் பிரபு?!!!

30th of September 2013
சென்னை::ஹரி இயக்கப் போகும் அடுத்தப் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சிங்கம் 2 பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து ஹரி தன்னுடைய அடுத்த படத்தை இயக்க தயாரிவிட்டார். இதில் விக்ரமுடன் மீண்டும் கூட்டணி சேரப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது ஹரி இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார் என்று மற்றொரு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
 
கும்கி, இவன் வேற மாதிரி படங்களைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடிக்கும் இந்தப் படத்தையும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. விக்ரம், தரணியுடன் இணையப்போவதால் இந்த வாய்ப்பானது விக்ரம் பிரபுவிற்கு சென்றுள்ளதாம். 

Comments