ஒரு தடவை மாத்திரம் பாலியல் உறவு கொள்ளும் செயலுக்கு உடன்பட மாட்டேன்: அசின்!!!


11th of September 2013
சென்னை::பொலிவூட்டில் அசின் நடித்த 6 படங்கள் வெளி­யா­கி­யுள்­ளன. இவற்றில் 5 படங்கள் 100 கோடி இந்­திய ரூபா­வுக்கு மேல் வசூல்­கு­வித்து வெற்றிபெற்­றன. காவ­ல­னுக்குப் பின்னர் அசின் நடித்த தமிழ் படங்கள் எதுவும் வர­வில்லை.  “பொலிவூட் திரைப்­ப­டத்­துறை, தனது திரு­மணம் குறித்த வதந்­திகள், காதல் குறித்த தனது கருத்து முத­லா­னவை குறித்து அசின் அளித்த செவ்வி இது:

கோடி ரூபா வசூ­லாகும் படத்தில் நடிக்கும் நடிகை நீங்கள். ஆனால் இன்னும் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்­க­வில்­லையே?
ஆம். ஆனால் நான் ஷாருக் கானை பார்த்­துக்­கொண்டே வளர்ந்தேன். பாட­சா­லையில் படிக்கும் காலத்தில் பிக்னிக் சென்று திரும்­பி­ய­போது பஸ்ஸில் ‘குச் குச் ஹோட்டா ஹை’ படம் காண்­பித்­தார்கள். நாம் வீட்டை அடைந்த போதிலும் பஸ்­ஸை­விட்டு இறங்க நான் விரும்­ப­வில்லை.  ஷாருக், யாஸ் ராஜ் பிலிம்ஸ், கரன் ஜோஹர் போன்ற பெயர்கள் இந்திப் படங்­க­ளுடன் தொடர்­பு­பட்­டவை. அவர்­க­ளுடன் நான் பணி­யாற்ற விரும்­பு­கிறேன். ஆனால், சரி­யான படம் அமைய வேண்டும். ஒரு வரு­டத்தில் எத்­தனை படம் என்­பது முக்­கி­ய­மல்ல. கலைத் திருப்­திதான் முக்­கியம்.

ரன்பீர் கபூர், இம்ரான் கான், ரன்வீர் சிங் போன்ற இளம் நடி­கர்­க­ளு­டனும் நீங்கள் இன்னும் நடிக்­க­வில்லை?
சரி­யான படம் அமையும் என நம்­பு­கிறேன். அவர்கள் எனது வயதை ஒத்­த­வர்­க­ளா­கவும் இள­மையும் துடிப்பும் நிறைந்­த­வர்­க­ளா­கவும் இருப்பர். அவர்­க­ளுடன் பணி­யாற்­று­வது வேடிக்­கையும் சுவா­ரஷ்­ய­மு­மாக இருக்­கு­மென நம்­பு­கிறேன்.
 
இந்த துறையில், சினிமா துறையில் நடி­கைகள் இருவர் நட்­பாக இருப்­ப­தில்லை எனக் கூறப்­ப­டு­கி­றதே? நீங்கள் அதை ஏற்­றுக்­கொள்­கி­றீர்­களா?
நான் சோனம் கபூர், ஜக்­குலின் பெர்­னாண்டஸ் போன்­றோ­ருடன் அடிக்­கடி தொடர்பில் இருக்­கிறேன். நட்பு என்ற பதம் பொருத்­த­மா­னதா என்று எனக்குத் தெரி­யா­விட்­டாலும்,  தேவை­யேற்­பட்டால், அமீர் கான், சல்மான் கான், அக் ஷய் குமார் ஆகி­யோரின் வீடு­க­ளுக்கு நான் தொலை­பேசி அழைப்பு விடுக்க முடியும். அவர்­க­ளுடன் சிறந்த தொழிற்சார் உறவை பேணு­கிறேன்.

இந்த துறையில் முன்­னே­று­வ­தற்கு போய்­ பிரெண்ட் வைத்­தி­ருப்­பது அவ­சி­யமா?
போய் பிரெண்ட் எவரும் இல்­லா­மலே முன்­னே­றி­யி­ருப்­பது குறித்து நான் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன். இந்த இன்­டஸ்ட்­ரியில் தொடர்­பு­களோ முறை­யான பயிற்­சியோ இல்­லா­மல்தான் நான் வந்தேன்.  தெற்­கி­லி­ருந்து வடக்­கிற்கு மாறு­வது இல­கு­வாக இருக்­க­வில்லை. அதற்கு பல எதிர்­பார்ப்­பு­களை பூர்த்தி செய்ய வேண்டும்.

தனி­யான ஒரு யுவதி இத்­து­றையில் தாக்­குப்­பி­டிப்­பது எந்­த­ளவு கடி­ன­மா­னது?
வேறு எந்தத் துறை­யிலும் தொழில் சிந்­த­னை­யுள்ள ஒரு யுவ­திக்கு ஏற்­ப­டுவதைப் போன்ற கஷ்டம் அல்­லது சுலபம் போன்­ற­துதான் இதுவும். திரைப்­படத்துறை என்­ப­தனால் ஒரு யுவதி எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள், அழுத்­தங்கள் வித்­தி­யா­சப்­ப­டு­வ­தில்லை. எனது குடும்­பத்தின் உதவி இருக்கும் வரைக்கும் எனக்கு நல்­லது. எனது வாழ்க்­கையில் என்ன நடக்­கி­றது என்­பது எனது பெற்­றோ­ருக்குத் தெரியும்.  அவர்­க­ளுக்கு மாத்­தி­ரமே நான் விளக்­க­ம­ளிக்க வேண்டும்.
 
முதன் முத­லாக யார் மீது உங்­க­ளுக்கு ஈர்ப்பு ஏற்­பட்­டது?
நான் இல­கு­வாக யாரி­டமும் வசப்­ப­டு­வ­தில்லை. எனது பதின்மர் பரு­வத்தில் அப்­ப­டி­யான  விடயங்கள் எதுவும் எனக்கு இருக்­க­வில்லை.

உங்கள் முதல் டேட்டிங் நினைவில் உள்­ளதா?
நம்­பு­வ­தற்கு கடி­ன­மா­கத்தான் இருக்கும். ஆனால் எனது முதல் டேட்டிங் சந்­திப்பு 25 வயதை கடந்த பின்­னர்தான் நிகழ்ந்­தது. அதுவும் திட்­ட­மி­டப்­பட்­ட­தொன்­றல்ல. அந்த நிகழ்­வுக்கு ஏனைய நண்­பர்கள் வரா­மல்­போய்­விட்­டார்கள், அவ்­வ­ள­வுதான்.

உங்­க­ளுக்கு எப்­போ­தேனும் போய் பிரெண்ட் ஒருவர் இருந்­தாரா?
இல்லை
 
உண்­மை­யா­கவா?
 
எனக்கு ஏற்ற, என்னை புரிந்­து­கொள்­ளக்­கூ­டிய ஒரு­வரை நான் கண்­டு­பி­டிக்க வேண்டும். நான் இன்னும் ஒரு­வரை தேட ஆரம்­பிக்­கவே இல்லை. எனது வய­தை­யொத்த இளை­ஞர்கள் உள்ள சூழ­லி­லிலும் நான் இல்லை. நான் ஒரு­போதும் டேட்டிங் போக­வில்லை. அதை அனு­ம­திக்கும் பின்­ன­ணி­யி­லி­ருந்து நான் வர­வு­மில்லை. மும்பை, டில்­லி­யி­லுள்­ள­வர்­க­ளுக்கு இதை விளக்­கு­வது கடினம்.  ஆனால் தெற்­கி­லுள்­ள­வர்கள் இதை புரிந்­து­கொள்­வார்கள்.

அப்­ப­டி­யானால் உங்கள் திரு­மணம் குறித்த கதைகள் எங்­கி­ருந்து வரு­கின்­றன.?
அது அபத்­த­மா­னது. எனது பிள்­ளைப்­ப­ராய நண்­பர்கள் உலகின் வேறு பாகங்­களில் இருக்­கி­றார்கள். நாம் புது­வ­ரு­டத்தில் அமெ­ரிக்­காவில் சந்­திப்­ப­தற்கு திட்­ட­மிட்டோம். ஆனால் நான் திரும்பி வந்­த­போது, நான் போய் பிரெண்டை சந்­திப்­ப­தற்­காக அமெ­ரிக்­கா­வுக்கு சென்­ற­தாக சொல்­லப்­படும் வதந்­தி­களை கேள்­விப்­பட்டேன். ஆரம்­பத்தில் அவற்றை புறக்­க­ணிக்க முயன்­றாலும் அவர்கள் நிறுத்­த­வில்லை. எனவே நான் விளக்­க­ம­ளிக்க வேண்­டி­யி­ருந்­தது.

நெருப்பில்லாமல் புகை வராதே?
(சிரிக்கிறார்). இங்கு புகைக்கும் இயந்திரங்கள் உள்ளன. அவற்றில் நெருப்பில்லாமல் புகை வரும்.
 
கேள்வி: அறிமுகமில்லாதவர்களுடன் ஒருநாள் மாத்திரம் பாலியல் உறவு கொள்வது (வன் நைட் ஸ்டன்ட்) குறித்து உங்கள் கருத்து என்ன?
ஒருபோதும் அந்த வன் நைட் ஸ்டன்ட்டுக்கு நா

ன் உடன்பட மாட்டேன்.  நான் முற்றிலும் உடல் கவர்ச்சியின் அல்லது தற்காலிக திருப்தியின் அடிப்படையில் செயற்படுவதில்லை. எந்த உறவு முறையும்  உணர்வூர்வமாக இருக்க வேண்டும். ஏனவே அந்த எண்ணத்துக்குக் கூட நான் இடமளிப்பதில்லை.

நீங்கள் விரும்­பு­ப­வ­ரையா அல்­லது உங்­களை விரும்­பு­வ­ரையா திரு­மணம் செய்­வது நல்­லது?
இரண்­டிலும் சம­நிலை வேண்டும். ஒன்றை மாத்­திரம் தெரி­வு­செய்­வது கவ­லைக்­கு­ரி­யது.

காதல் குறித்த உங்கள் எண்ணம் என்ன?
காதல் சுய­ந­ல­மற்­றது. காதல் என்­பது மற்­ற­வரின் ஒட்­டு­மொத்த வளர்ச்­சிக்கு ஒருவர் துணை புரி­வது. காதல் என்­பது தியாகம் செய்­வது, அந்த நபரின் மகிழ்ச்சியில் ஒரு அம்சமாக நீங்களாக இல்லாவிட்டாலும்கூட அவரைப் பற்றியே சிந்திப்பது.

நீங்கள் ஏன் இன்னும் காதலில் விழவில்லை?
நான் இன்னும் அத்தகைய ஆணை சந்திக்கவில்லை. முதல் பார்வையிலேயே காதல் என்பதை நான் அனுபவித்ததில்லை. முதல் பார்வையில் காமம் ஏற்படலாம். ஆனால் காதல் அதற்கும் அப்பாற்பட்டது. அனைவரும் காதலை எதிர்பார்க்கிறார்கள். நானும் அப்படித்தான். ஆனால் எல்லாவற்றுக்கும் காலமும் இடமும் அமைய வேண்டும் என்றார்.

Comments