24th of September 2013
சென்னை::சினிமாவில் நடிக்க வரும் முன்பிருந்தே சூர்யாதான் தன்னுடைய ஃபேவரைட் ஹீரோ என்று லட்சுமி மேனன் தெரிவித்துள்ளார்.
சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் லட்சுமி மேனன். அதனைத்தொடர்ந்து கும்கி, குட்டிப்புலி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர், சிப்பாய், பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தாண்டா ஆகிய படங்களில் பிஸியாக நடித்துக் கொணிடிருக்கிறார். இதில் விஷாலுடன் இணைந்து நடித்த பாண்டிய நாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
சினிமாவில் நடிக்க வரும் முன்பிருந்தே சூர்யாதான் தன்னுடைய ஃபேவரைட் ஹீரோ என்று பேட்டி ஒன்றில் லட்சுமி மேனன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: எனக்கு கவர்ச்சி வேடங்கள் செட் ஆகாது. எனவே, இப்போதைக்கு கிராமத்து கதாபாத்திரங்களில் டீசன்டாக நடித்துவிட்டு எதிர்காலத்தில் கிளாமர் கதாபாத்திரங்களில் நடிப்பேன். கௌதம் கார்த்திக்தான் திரை உலகில் தன்னுடைய க்ளோஸ் ஃப்ரண்ட்.
எனது கனவு நாயகன் சூர்யா. அவர் நடித்த காக்க காக்க, கஜினி போன்ற படங்களை பலமுறை பார்த்து ரசித்திருக்கிறேன். சூர்யா படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டால் கதையே கேட்காமல் ஓகே சொல்லிவிடுவேன் என்கிறார் லட்சுமி மேனன்.
Comments
Post a Comment