'அஜித், சூர்யா, விஜய் கூட டூயட் பாடணும்: ஸ்ரீதிவ்யா!!!

29th of September 2013
சென்னை::ஸ்ரீதிவ்யா. 'யமுனா' ஹீரோயின் ஸ்ரீரம்யாவின் அழகுத் தங்கச்சி. பஸ் ஸ்டாப்', 'மனசார ', 'மல்லலோ தீர்மலோ சிறுமல்லி' படங்கள் மூலம் தெலுங்குத் திரை தொட்டவர், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மூலம் தமிழுக்கு  அக்கா ஸ்ரீரம்யாவும் தெலுங்கில் நந்தி விருது வாங்கிய நடிகை.

அக்கா வழியிலே வந்தாச்சா?''

ஆமா. அரசியல் வாரிசு மாதிரி, நான் சினிமா வாரிசுங்க. காலேஜ் படிக்கும்போதே பார்ட் டைம் மாடலா இருந்தேன். அக்காதான் சினிமாவுக்கு வர ஐடியா சொன்னா. 'பஸ் ஸ்டாப்' தெலுங்கில் ஹிட் ஆனதால், தமிழ்ல நம்பிக்கையா வந்திருக்கேன்.''

தமிழ் தெரியுமா?''

தமிழ் கொஞ்சம் நல்லாவே பேசுவேன். இந்த விஷயத்தில் அக்காவை விட  நான் பெட்டர்.''

 கலகலன்னு பேசுறீங்க... ஃப்ரெண்ட்ஸ் ஜாஸ்தியோ?''

அய்யோ... இதுக்கு முன்னாடி நான் ரொம்ப சைலன்ட். வீட்லயே அதிகம் பேச மாட்டேன். நடிகை ஆனதும் சிவகார்த்திகேயன், சத்யராஜ் சாரோட பேசிப்பேசி வாயாடி ஆகிட்டேன். கோபம், டென்ஷன் எதுவா இருந்தாலும் உள்ளேயே வைச்சு ஃபீல் பண்ணிட்டு இருப்பேன். இப்போ வெளிப்படையாப் பேசுறதால, கொஞ்சம் ஃப்ரீயா இருக்கேன். படபடன்னு பேசுறதைப் பார்க்கும் ஃபிரண்ட்ஸ், நீயா இப்படின்னு ஆச்சர்யப்படறாங்க.''

அக்காவோட சேர்ந்து நடிப்பீங்களா?''

கண்டிப்பா. அக்கா ஸ்ரீரம்யா '1940ல ஒக்க கிராமம்' படத்துல அறிமுகமானா. முதல் படத்துலயே மொட்டை போட்டு நடிச்சு பல விருதுகள் வாங்கிட்டா. நானும்  நல்லா நடிக்குறேன்னு அஞ்சலி மாதிரி பேரு வாங்கணும். அஜித், சூர்யா, விஜய் கூட டூயட் பாடணும். தொழில்னு வந்துட்ட பிறகு அக்காவும் எனக்குப் போட்டிதான்.''

பிடித்த விஷயம்?''

சேலை, தாவணி ரொம்பப் பிடிக்கும். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் முழுக்க நான் அப்படிதான் வருவேன்.  ஹீரோயினை மையமா வெச்சு எடுக்குற படங்கள்னா விரும்பிப் பார்ப்பேன். ஆனா, இப்போ அந்த மாதிரியான நல்ல படங்கள் வர்றதில்லை. இனிமே வந்தா நல்லா இருக்கும்."

Comments