கதாநாயகியான திருநங்கை ரோஸ்!!!

4th of September 2013
சென்னை::விஜய் தொலைக்காட்சியில் 'இப்படிக்கு ரோஸ்' என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான திருநங்கை ரோஸ் வெங்கடேசன், சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

'கிரிக்கெட் ஸ்காண்டல்' என்ற படத்தை இயக்கும் ரோஸ், இப்படத்தில் ஹீரோயினாகவும் நடிக்கிறார்.

கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், கிரிக்கெட் விளையாட்டு இன்றைய காலகட்டத்தில் எப்படி சூதாட்டமாக மாறியுள்ளது என்ற பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் குறித்து கூறிய ரோஸ், "ஐபில் கிரிக்கெட் சூதாட்டம் வெளியாகும் முன்பே இப்படத்தின் திரைக்கதையை நான் எழுதினேன். மேலும் இப்படம் குறித்தும், கிரிக்கெட் சூதாட்டம் குறித்தும் பல்வேறு தகவல்களை, பலரிடம் இருந்து திரட்டியுள்ளேன். இந்த கதை யாரையும் குறிப்பிடும்படி அமைக்கப்படவில்லை." என்று தெரிவித்தார்.

Comments