30th of September 2013
சென்னை::இலியானா கூறியது: என்னுடன் நடித்த ஹீரோவை தீவிரமாக காதலித்தேன். பல மாதங்களாக நல்ல நட்புடன் நாங் கள் இருந்தோம். டேட்டிங் சென்றேன். ஆனால் அந்த காதல் கைகூடவில்லை. இப்போது வெளிநாட்டுக்காரரை காதலிக்கிறீர்களா என கேட்கிறார்கள். என்னுடைய சொந்த வாழ்க்கை பற்றி எனது பெற்றோருக்கு தெரியும். அவர்களுக்கு மட்டும் எல்லாம் தெரிந்தால் போதும்.
நான் திமிர் பிடித்தவள் என்கிறார்கள். அது பற்றி யார் எது சொன்னாலும் கவலையில்லை. முதல் படத்துக்கு மட்டுமே டெஸ்ட் ஷூட்டில் பங்கேற்றேன். எல்லா படங்களுக்கும் டெஸ்ட் ஷூட்டில் நான் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றவர்களின் மெட்டுகளுக்கு (உத்தரவுகளுக்கு) ஏற்ப என்னால் ஆட முடியாது. என் மனம் என்ன சொல்கிறதோ அதன்படி மட்டுமே நான் வாழ்வேன்.
Comments
Post a Comment