கடல்’ கவுதம் மீது பரபரப்பு புகார்!!!


25th of September 2013
சென்னை::கடல்Õ படத்தில் அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். ‘சிப்பாய்Õ படத்துக்கு கொடுத்த கால்ஷீட்டை திடீரென்று மாற்றி ஐஸ்வர்யா இயக்கும் ‘வை ராஜா வைÕ படத்துக்கு கொடுத்ததுடன், தனது நீண்ட தலைமுடியையும் கட் செய்துவிட்டார் என கவுதம் மீது புகார் கூறப்பட்டது.
 
இதற்கு பதில் அளித்த கவுதம், ‘சிப்பாய் படத்துக்கு கொடுத்த கால்ஷீட்டை மாற்றி Ôவை ராஜா வைÕ படத்துக்கு தரவில்லை. இப்படத்தின் ஷூட்டிங்கை எனது பிறந்தநாளின்போது தொடங்குவது என்று ஏற்கனவே ஐஸ்வர்யாவிடம் பேசி முடிவு செய்யப்பட்டது. அதன்படிதான் ஷூட்டிங்கில் பங்கேற்றேன். இந்த கால்ஷீட் Ôவை ராஜா வைÕ படத்துக்கு கொடுக்கப்பட்டதுதான். தயாரிப்பாளர்களின் கஷ்டம் எனக்கு தெரியும்.
 
 எனது பணிகளை குழப்பம் இல்லாமல் அமைத்துக்கொள்கிறேன்Õ என்றார். முன்னணி இடத்தில் இருந்த கவுதமின் அப்பா கார்த்திக், கால்ஷீட் சொதப்பல் காரணமாகத்தான் சினிமாவிலிருந்து ஒதுக்கப்பட்டார். அந்த நிலை தனக்கு வராமல்.கவுதம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர் சினிமா துறையினர்.

Comments