சிம்பு-ஹன்சிகா காதல் : புது தகவலால் பரபரப்பு!!!

7th of September 2013
சென்னை::சிம்பு, ஹன்சிகா காதல் தொடர்பாக பரவி வரும் புது தகவலால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சிம்பு, ஹன்சிகா இணைந்து 2 படங்களில் நடிக்கின்றனர். ‘வாலு படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் இதுபற்றி அறிவிக்காமல் இருவரும் ரகசியம் காத்து வந்தனர். கடந்த மாதம் இருவருமே காதல் ரகசியத்தை போட்டு உடைத்தனர். இதற்கிடையில் சிம்பு, ஹன்சிகாவுக்கு இடையேயான காதல் விவகாரம் பகிரங்கமானதைத் தொடர்ந்து ஹன்சிகாவின் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்திருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக  ‘எங்களது திருமணம் பெற்றோர் சம்மதத்துடன்தான் நடக்கும். அதுவும் என் தங்கை இலக்கியாவுக்கு திருமணம் முடிந்தபிறகுதான் எனது திருமணம் நடக்கும்Õ என்று சிம்பு கூறினார்.

அதேபோல் ஹன்சிகாவும், ‘இன்னும் 5 வருடம் கழித்துத்தான் திருமணம் செய்துகொள்வேன்Õ என்றார். இந்தநிலையில் நடிகை சிம்ரன், ஹன்சிகாவுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது காதல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கும்படி கூறினாராம். இப்போது மற்றொரு சீனியர் நடிகையும் ஹன்சிகாவுக்கு போனில் தொடர்பு கொண்டு, ‘என்னிடம் சிம்பு திருமணம் செய்துகொள்ள சம்மதம் கேட்டார். வயது வித்தியாசத்தால் ஏற்கவில்லைÕ என்று தெரிவித்தாராம். சீனியர் நடிகை ஒருவர் இப்படி சொன்னதாக பரவியுள்ள புது தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல்கள் இணையதளத்தில் பரப்பப்படுவதை அறிந்து சிம்பு ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். ‘ஹன்சிகா எங்களின் அண்ணி ஆவதை தடுக்க சிலர் சதி செய்கிறார்கள்Õ என அவர்கள் கொதிக்கின்றனர்.

Comments