வாழ்க்கை முழுவதும் நடிக்க விருப்பமில்லை : கார்த்திகா திடீர் முடிவு!!!

11th of September 2013
சென்னை::வாழ்க்கை முழுவதும் நடிகையாக இருக்கும் எண்ணமில்லை' என்றார் கார்த்திகா. ‘கோ' படத்தில் அறிமுகமானவர் கார்த்திகா. அடுத்து பாரதிராஜா இயக்கத்தில் ‘அன்னக்கொடி‘ படத்தில் நடித்தார். தற்போது அருண் விஜய்யுடன் ‘டீல்' படத்தில் நடித்து வருகிறார்.

எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் வராததால் கார்த்திகா விரக்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகையாக தொடர்வது பற்றி அவர் கூறியதாவது: ஓட்டல் மேனேஜ்மென்ட் படிக்க சுவிட்சர்லாந்து செல்ல இருந்த நிலையில்தான் எனக்கு தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. முயற்சிக்கலாமே என்றுதான் நடிக்க வந்தேன்.

விரைவிலேயே தமிழில் ‘கோ' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. வாழ்க்கை முழுவதும் நடிகையாகவே இருக்க வேண்டும் என்ற போலி நம்பிக்கையை என் மனதில் வைத்திருக்கவில்லை. இதுதான் வாழ்வாதாரம் என்றும் சொல்ல முடியாது. நல்ல படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். இப்படி சொல்வதால் நடிப்புக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்று அர்த்தம் ஆகாது. நடிகையாக தொடரும்வரை முழுஈடுபாடும் அதில் காட்டுவேன்.

Comments