12th of September 2013
சென்னை::விஜய் இருமினாலும் அதனை அரசியலில் நுழைவதற்கான முன்னறிவிப்பு என்று பரபரப்பு செய்திதர பலர் தயாராக இருக்கிறார்கள். செய்தியின் தலைப்பில் இருக்கும் ஆக்ஷனைப் பார்த்து சினிமாவுக்கு வெளியே எதையும் சிந்திக்க வேண்டாம்.
தற்போது ஜில்லா படத்தில் பிஸியாக இருக்கிறார் விஜய். அரசியல் வாசனை சிறிதும் இல்லாத படம் என்பதை விஜய்யும், இயக்குனர் நேசனும் தெளிவுப்படுத்தியுள்ளனர். உடன் மோகன்லால் நடிப்பதால் என்ன கதையாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் அனைவரிடமும் இருக்கிறது.
ஜில்லாவின் புதிய ஷெட்யூல்ட்
நாளை சென்னை மோகன் ஸ்டுடியோவில் தொடங்குகிறது. விஜய் இந்த ஷெட்யூல்டில் கலந்து கொள்கிறார். அனேகமாக சண்டைக் காட்சியாக இருக்கும் என்கின்றன உள்வட்ட தகவல்கள். மோகன்லால, காஜல் அகர்வால் இந்த ஷெட்யூல்டில் கலந்து கொள்ளவில்லை.
சேன் இயக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகை நிவேதா தாமஸும் நடிக்கிறார். மகத், பூர்ணிமா பாக்யராஜ் பரோட்டா சூரி ஆகியோரும் நடிக்கின்றனர்.டி.இமான் இசையமைக்கிறார்.
Comments
Post a Comment