வில்லனாக மாறும் தம்பி ராமைய்யா!!!

20th of September 2013
சென்னை::தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, பிறகு சிறு சிறு காமெடி வேடங்களில் நடித்த தம்பி ராமைய்யா, 'மைனா' படத்தின் மூலம் காமெடியையும், தாண்டி ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றதுடன், தேசிய விருதையும் வென்றார்.

தற்போது குணச்சித்திரம், காமெடி என்று இரண்டு குதிரைகளிலும் வெற்றிகரமாக சவாரி செய்துக்கொண்டிருக்கும் தம்பி ராமைய்யா, மூன்றாவதாக ஒரு குதிரையை இணைத்துக்கொள்ளப் போகிறார். ஆம், தம்பி ராமையா 'ஆப்பிள் பெண்ணே' என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

வில்லன் என்றால், ஏதோ காமெடி வில்லன் என்று நினைத்துவிட வேண்டாம், ஒரு காரியத்தை செய்ய நினைத்தால், அதை அமைதியாக, அதே சமயம் கொடுமையாக செய்து முடிக்கும் ஒரு கொடூர வில்லன் கதாபாத்திரமாக இந்த வேடம் இருக்குமாம்.

Comments