12th of September 2013
சென்னை::இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வருகிற 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்க இருக்கிறது. இந்த விழாவை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார். நிறைவு விழாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் கேரளா, கரநாடகா, ஆந்திர மாநில முதல்வரகளும் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.
விழாவில், 22-ஆம் தேதி காலை கன்னட திரையுலகினரின் கலை நிகழ்ச்சிகளும், மாலை தெலுங்கு திரையுலகினரின் நிகழ்ச்சிகளும், 23-ஆம் தேதி மலையாள திரையுலகினரின் கலை நிகழ்ச்சிகளும், நிறைவு நாளன்று தமிழ் திரையுலகினரின் கலை நிகழ்ச்சிகளும் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் தெலுங்கு திரையுலகினர் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதில் இருந்து பின் வாங்கியுள்ளனர்.
இதற்கான காரணம் குறித்து தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கம், தெலுங்கான பிரச்சனைக்காக மக்கள் போராடி வரும் இந்த நேரத்தில் நாங்கள் அங்கு வந்து கலை நிகழ்ச்சிகளை நடத்துவது பொருத்தமாக இருக்காது? நாங்கள் விலகி இருப்பதுதான் நன்றாக இருக்கும். ஆனால் விழாவில் கலந்துகொள்வார்கள்’’ என்று தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment