19th of September 2013
சென்னை::உனக்கு 20 எனக்கு 18படத்தின் மூலம் இறக்குமதியான ஸ்ரேயா, குறுகிய காலத்திலேயே வளர்ந்து, சிவாஜி படத்தில், ரஜினியுடன் ஜோடி சேர்ந்தார். இதனால், கோலிவுட்டின் சிவாஜி கேர்ள் என்று பெருமையாக அழைக்கப்பட்டார். அதன் பின், வடிவேலு நடித்த, இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாடிய பின், ஸ்ரேயாவின் மார்க்கெட் வேகமாக சரிந்தது.
மீண்டும் தமிழில், ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் கன்னடத்துக்கு சென்று, சந்திரா என்ற, சரித்திர படத்தில், இளவரசி கெட்டப்பில் நடித்து வந்தார் ஸ்ரேயா. ஆனால், அந்தப் படம், திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், சில மாதங்களாக காத்திருந்த ஸ்ரேயா, ஒரு பாட்டுக்கு நடனமாடியாவது, சினிமாவில் நீடிப்போம் என்ற அதிரடி முடிவுக்கு வந்துள்ளார். அதனால், பிரியா மணி, சதாவைத் தொடர்ந்து, பிரபல ஹீரோக்களுடன் நடனமாடும் வாய்ப்புகளுக்காக, ஸ்ரேயாவும் வரிந்து கட்டிக் கொண்டு திரிகிறார்.
Comments
Post a Comment